
தமிழ் தொலைகாட்சி துறையின் முன்னணி நிறுவனமான சன் டி. வி.,யின் தலைமை இயக்க அதிகாரி(Chief Operating Officer) செய்தி வாசிப்பாளரை பாலியல் தொல்லை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சன் டி.வி. குழுமத்தின் மலையாள நெட்வர்க் தொலைகாட்சியான சூர்யா டி.வி.யின் தலைமை இயக்க அதிகாரியாக பணியாற்றி வருகிறார் பிரவீன். அதே சூர்யா டி.வி.யில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வரும் பென் ஒருவர் இவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அதோடு தன் ஆசைக்கு ஒத்து வராவிட்டால் சம்பளம் தரமாட்டேன் என்று சம்பளத்தை பிடித்து வைத்துள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் CEO பிரவீன் இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.