நடிப்பு- சித்தார்த், லக்ஷ்மி மேனன், சிம்ஹ
தமிழில் எத்தனையோ Gangster திரைப்படங்களை பாத்திருக்கிறோம் இப்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப்படைப்பான “ஜிகர்தண்டா”.
வழக்கமான கதைகளில் இருந்து சற்று வித்தியாசமான படம். எப்படியாவது ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும் என்று துடிக்கும் சித்தார்த் (கார்த்திக்) அதனால் தொலைகாட்சியில் நடைபெறும் இயக்குனர் போட்டியில் பங்கு பெற்று வாய்ப்பை இழந்தும் பின்பு வாய்ப்பு பெற்றும் விடுகிறார். படத்தின் தயாரிப்பாளர் இவரின் கதை பிடிக்காமல் “ரவுடி, வெட்டு, குத்து என்று உண்மையான கதை போல ஒரு படம் வேண்டும் என்று கூறுகிறார். இதனால் சித்தார்த் ஊரில் இருக்கும் ரவுடிகளில் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான ரௌடியை தேடுகிறார். அவரின் தேடிதலில் மதுரையை கலக்கும் சேது வருகிறார். அதன் பிறகு சேதுவை பற்றி உண்மை சம்பவங்களை அவரை சுற்றி இருபவர்களின் மூலம் தெரிந்து கொள்கிறார். ஒரு சமயத்தில் சித்தார்த் சேதுவிடம் சிக்கும் நிலை வருகிறது. சித்தார்த் படம் எடுத்தாரா? சேதுவிடம் கொலை செய்ய பட்டர? என்பது மீதி கதை.
படத்தின் முக்கிய பலம் என்று பார்த்தல் இசையை சொல்லியே ஆகா வேண்டும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் மிரட்டிருகிறார். அதுவும் சேது வரும் பொழுது எல்லாம் பின்னணி இசையில் மிரளவைக்கிறார். அதன் பிறகு வில்லன் சேது ரொம்ப கேசுவல் நடிப்பு ஆனால் அனைவரையும் ஈர்க்கும் நடிப்பு. குறிப்பாக அந்த பாத்ரூம் துப்பாக்கி சூடு. சேகர் மற்றும் சௌந்தர் ப்ளன்னிங்.
சித்தார்த் கதைக்கு பொருத்தமான கதாநாயகன். கருணா தன்னுடைய வழக்கமான பாணியில் அனைவரையும் அப்போ அப்போ கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
இரண்டம்பாதியில் வரும் அந்த நடிப்பு வாத்தியார் அருமை. சேதுவிடம் இருக்கும் அடியாட்கள் கனகச்சிதமாக அவங்க நடிப்பினை செய்துள்ளனர். விஜய்சேதுபதி சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிக்குறார்.
லக்ஷ்மி மேனன் பெரிதாக நடிக்கும் வைப்பு இல்லை.. சும்மா வந்து போகிறார். பாடல்கள் மற்றும் காதல் காட்சிகளுக்கு பெரிதாக இடமில்லை.
முதல் பாதி மிக வேகமா நகர்கிறது.. இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வு (காரணம் படத்தின் நீளம்.. கொஞ்சம் குறைத்திருக்கலாம்) இருந்தாலும் படத்தின் திரைகதை மிக வலுவாக இருப்பதால் சுவாரசியம் குறையவில்லை. அதுதான் இயக்குனர் கார்த்திக் சுப்புரஜ்க்கு கிடைத்த வெற்றி.